Published : 17 Dec 2017 11:19 AM
Last Updated : 17 Dec 2017 11:19 AM

மெர்சிடிஸ் ஏ க்ளாஸ் போன்று மாற்றப்பட்ட மாருதி கார்: உரிமையாளருக்கு அபராதம் விதித்து கேரள அதிகாரிகள் அதிரடி

கேரள மாநிலம், தூவக்காடு பகுதியை சேர்ந்தவர் முகமது. மாருதி சுசூகி பலேனோ கார் வைத்துள்ள இவருக்கு மெர்சிடிஸ் ஏ க்ளாஸ் பென்ஸ் கார் மீது மோகம் ஏற்பட்டது. பலேனா காரானது இந்திய சந்தையில் ரூ.5.24 லட்சம் முதல், ரூ.8.55 லட்சம் வரை விலையுள்ளது. அதே நேரத்தில் மெர்சிடிஸ் ஏ க்ளாஸ் காரின் விலை ரூ.27.53 லட்சத்தில் தொடங்குகிறது. ஒவ்வொரு நகரையும், காரின் சிசியையும் பொறுத்து இதன் சந்தை விலை மாறுபடுகிறது. முகமதுக்கு மெர்சிடிஸ் ஏ க்ளாஸ் காரின் மீது ஆர்வம் அதிகமாகவே, தனது பலேனோவை ஆல்ட்ரேசன் செய்தார்.

மஞ்சேறி பகுதியை சேர்ந்த அனஸ் முகமது இதனை செய்தார். மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் காரின் வைரக் கற்கள் பதிக்கப்பட்டது போன்ற க்ரோம் பூச்சுடன் கூடிய முகப்பு க்ரில் அமைப்பு இந்த மாருதி பலேனோ காரில் பொருத்தப்பட்டது. இதன் நடுவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நட்சத்திர வடிவ லோகோ பிரதானமாக அமைக்கப்பட்டுள்ளது. முன்புற பம்பர் அமைப்பும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பலேனோ கார் என்று எளிதாக கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காராக மாறியது. மெர்சிடிஸ் பென்ஸ் காருடன் ஒத்துப்போகும் வகையில், புதிய 5 ஸ்போக் அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. லோ புரோஃபைல் டயர்களும் சேர்ந்து மாருதி பலேனோ காரை உயர் ரக கார் மாடலாக மாற்றியது.

பின்புறத்தில் பம்பர் அமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டிருப்பதுடன், பின்பக்கத்தில் தலா இரண்டு புகைப்போக்கி குழாய்கள் கொண்ட இரட்டை சைலென்சர் அமைப்பு உள்ளது. சிவப்பு வண்ணம் கொண்ட அந்த மாருதி பலேனோ காரில் மேற்கூரை, பில்லர்கள் கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு பென்ஸ் போலவே மாற்றப்பட்டது.

இது குறித்து திரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் முஜீப்க்கு தகவல் வந்தது. அவரது தலைமையில் சென்ற போக்குவரத்து அதிகாரிகள், ஆல்ட்ரேசன் செய்யப்பட்ட காரை பறிமுதல் செய்து, அதில் பொருத்தப்பட்ட பாகங்களை அகற்றினர். மேலும் அந்த வாகனத்தின் உரிமையாளர் முகமதுக்கு ரூ.5000 அபராதமும் விதித்தனர். இந்நிலையில் பென்ஸ் என நினைத்து, ஏமாந்து முகமது, இந்த காரை வாங்கியதாக சிலர் பரப்பி விட அதுவும் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x