Published : 26 Dec 2017 04:54 PM
Last Updated : 26 Dec 2017 04:54 PM
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள, 8,530 அடி உயரத்தில் உள்ள குல்மார்கில் 120 ஆண்டு பழமை வாய்ந்த புனித மேரி தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை அடுத்து உள்ளூர்வாசிகள், முஸ்லிம்கள் உட்பட நூற்றுக்கணக்கான விளக்குகளை ஏற்றி சிறப்பித்தனர்.
சாந்தாகிளாஸ் இனிப்புகளை வழங்கினார்.
பண்பாட்டு மற்றும் இசை நிகழ்ச்சிகள், சாகச விளையாட்டுகள் ஆகியவை சுற்றுலாவாசிகளுக்காக நடத்தப்பட்டன.
இதில் விதத்தில் நிறைய உள்ளூர் முஸ்லிம்கள் கலந்து கொண்டு ஒளியேற்றி விழாவைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT