Published : 20 Sep 2023 06:15 AM
Last Updated : 20 Sep 2023 06:15 AM

ஒரு வார துப்பாக்கி சண்டை முடிந்தது - லஷ்கர் கமாண்டர் உட்பட 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கடந்த வாரம் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாருடன், பாதுகாப்புப் படையினர் அங்கு சென்றனர்.

அங்கு கடந்த 7 நாள்களாக பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துவந்தது. இந்நிலையில் நேற்றுநடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது லஷ்கர் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் உசைர் கான் உட்பட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்துடன் ஒரு வாரம் நடந்த என்கவுன்ட்டர் முடிவுக்கு வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து போலீஸ் ஏடிஜிபி விஜயகுமார் அனந்த்நாக்கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுவர். இங்கு 3 தீவிரவாதிகள் இருக்கலாம் என எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. இதில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர். 3-வது தீவிரவாதியைத் தேடும் பணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த வாரம் தெற்கு காஷ்மீரின் கடோல் வனப்பகுதியில் தொடங்கிய இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ அதிகாரிகள், காவல் அதிகாரி உள்பட நான்கு வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x