Published : 19 Sep 2023 12:24 PM
Last Updated : 19 Sep 2023 12:24 PM
புதுடெல்லி: காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியத் தூதரக அதிகாரியை கனடா வெளியேறும்படி உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கான கனடா தூதரக அதிகாரியை 5 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான கனடா துணை தூதரை அழைத்த வெளியுறவு அமைச்சகம், இந்தியாவில் உள்ள கனடா தூதரை வெளியேற்றும் முடிவைப் பகிர்ந்தது.
சர்ச்சையின் பின்னணி: இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர்.
காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என அவர்களின் போட்டோக்களுடன் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "இந்திய அரசாங்க முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. " என்று கூறினார். இதனை இந்தியா அபத்தமானது என்றும் உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிகையை கனடா வெளியேற்றிய நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கான கனடா தூதரை வெளியேறும்படி இந்தியா கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 7 Comments )
ஒரு கொலைக்காக... ஆதாரங்கள் உள்ளது என்று கனடா வெளியேற்றியதற்கும்.... பதிலுக்கு பதில் என்று இந்தியா வெளியேற்றியதற்கும் நிரம்ப வித்தியாசம் உள்ளது. இங்கிருந்த கனடா தூதர் செய்த குற்றம் என்னவென்று சொல்லாமல்... இந்திய ஜனநாயகம் மோசமான பாதையில் செல்கின்றது.
7
4
Reply
Krishnan தற்போது காலிஸ்தான் தீவிரவாத இயக்கம் இருந்து இன்னமும் இந்தியாவுக்குள் தீவிரவாதத்தை வளர்த்து வந்தால்... ஆதாரங்களை சமர்ப்பித்து... குற்றவாளிகளை நீதியின் முன்னாள் தானே நிறுத்தவேண்டும். அதுதானே ஜனநாயக முறை. புல்டோசர் கூட்டத்துக்கு ஜனநாயகம் தெரியாதா?
3
0
காலிஸ்தான்ஒரு பயங்கரவாத இயக்கங்கள் அதற்கு ஒரு நாடு எதற்கு ஆதரவு அளித்தது . யோசிக்க வேண்டும். 80,90 களிள் என்போன்று பஞ்சாப் இல் இருந்த வர்களுக்க தான் தெரியும்
0
3
சில மாதங்கள் கழித்து இந்திய உதவி கேட்டு திருவோடு ஏந்தி வருவார் கனடா நாட்டு பிரதமர்.
5
9
Reply
சிரிப்புத் தான் வருகிறது!
4
1
PER CAPITA GDP-ல் கனடா 22-வது இடத்தில் இருக்கின்றது. இந்தியா... 120 வது இடம்.
10
2