Published : 15 Dec 2017 09:57 AM
Last Updated : 15 Dec 2017 09:57 AM
திருமலை திருப்பதி தேவஸ் தான கோயில்கள் உட்பட நாட்டில் உள்ள 195 கோயில்களில் நாளை முதல் ஆண்டாள் திருப்பாவை பாடப்படுகிறது.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவைக்கு பதில் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாடப்படுகின்றன. அந்த வகையில் மார்கழி முதல் நாளான நாளை முதல் ஜனவரி 14-ம் தேதி வரை ஆண்டாள் திருப்பாவை பாடப்படும் என திருப்பதி தேவஸ்தானத்தின் திவ்ய பிரபந்த ஆழ்வார் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஏழுமலையான் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் மற்றும் திருப்பதியில் உள்ள அன்னமாச்சார்யா கலாமந்திர், வரதராஜ சுவாமி திருக்கோயில், கீதா மந்திர், மலையாள சத்குரு சேவா சமாஜம், பக்த ஆஞ்சநேய சுவாமி கோயில் உட்பட பல இடங்களில் காலை 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரம் திருப்பாவை பாடப்படும்.
இதேபோல ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவ கோயில்களிலும், கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயில், மகாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீ ரொன்ச்சா கோயில் மற்றும் டெல்லி, ஒடிசா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள மொத்தம் 195 வைஷ்ணவ கோயில்களில் நாளை முதல் ஜனவரி 14-ம் தேதி வரை ஆண்டாள் திருப்பாவை பாடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT