Published : 14 Sep 2023 07:49 AM
Last Updated : 14 Sep 2023 07:49 AM
பரத்பூர்: குஜராத்தின் பாவ்நகர் மாவட்டம் திகோரில் இருந்து சுமார் 50 பேர் தனியார் பேருந்து ஒன்றில் உத்தர பிரதேச மாநிலம், மதுரா நகருக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டனர். பேருந்து நேற்று அதிகாலை ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டம், லக்கன்பூர் பகுதியில் ஒரு பாலத்தின் மீது செல்லும்போது பழுதடைந்து நின்றுவிட்டது. பயணிகள் சிலர் பேருந்தை விட்டு இறங்கி, அதன் பின்னால் நின்றிருந்தனர்.
இந்நிலையில், வேகமாக வந்த ஒரு லாரி, பயணிகள் மீதும் பிறகு பேருந்து மீதும் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 ஆண்களும் 6 பெண்களும் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயம் அடைந்தனர்.
விபத்து தொடர்பாக ராஜஸ்தான் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.விபத்து குறித்துபிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், தலா ரூ.4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...