Published : 02 Sep 2023 12:31 PM
Last Updated : 02 Sep 2023 12:31 PM
புதுடெல்லி: டெல்லியில் ஜி-20 மாநாடு நடைபெற இருப்பதைத் தொடர்ந்து போலீஸார் இன்று (சனிக்கிழமை) முழு ஒத்திகை நடத்துகின்றனர். தேசிய தலைநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லி மாவட்டத்தை நோக்கி வானப்பேரணிகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலீஸாரின் முழு ஒத்திகை இன்று நடைபெறுகிறது. இந்த ஒத்திகை காலை 8.30 முதல் பகல் 12 மணிவரையிலும், மாலை 4.30 முதல் 6 மணிவரை மற்றும் இரவு 7 மணி முதல் 11 மணி வரையிலும் நடைபெறுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால் பயணிகள் மெட்ரோ சேவையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாகன பேரணி ஒத்திகையின் போது, சர்தார் படேல் மார்க் - பஞ்சசீல் மார்க், சர்தார் பட்டேல் மார்க் - கவுடில்யா மார்க், கோல் மேத்தி ரவுண்டானா, மான்சிங் ரவுண்டானா, சி-ஹெக்சாகான், மாதுரா ரோடு, ஷாகீர் ஹூசைன் மார்க், சுப்பிரமணியம் பாரதி மார்க், பைரோன் மார்க் - ரிங் ரோடு, சத்யா மார்க், சாந்திபாத் ரவுண்ட், ஜன்பத் - வெற்றிப்பாதை, பாராஹம்பா சாலை சிக்னல், டால்ஸ்டாய் மார்க் மற்றும் விவேகானந்தா மார்க் போன்ற பகுதிகளில் போக்குவரத்து தடைபடும்.
இந்த சாலைகளைப் பயன்படுத்தும் பயணிகள் போக்குவரத்து பாதிப்புக்கு ஏற்ப தங்களின் பயணங்களைத் திட்டமிட்டு கொள்ளவும், ஒத்திகை நடத்தும் குறிப்பிட்ட நேரங்களில் இந்தச் சாலைகளைப் பயன்படுத்துவகை தவிர்க்க வேண்டும்" என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் செப்.9,10 ஆகிய நாட்களில், புதுடெல்லியில் இருக்கும் ப்ரகதி மைதானம், பாரதி மண்டபத்தில் வைத்து நடக்க இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT