Published : 02 Sep 2023 06:55 AM
Last Updated : 02 Sep 2023 06:55 AM

இந்தியாவின் வளர்ச்சி 6.7%: மூடிஸ் ஆய்வு நிறுவனம் கணிப்பு

புதுடெல்லி: நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி விவரங்களை தேதிய புள்ளியல் அலுவலகம் நேற்றுமுன்தினம் வெளியிட்டது. அதன்படி, முதலாம் காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் 2023 ஆண்டின் முடிவில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என்று மூடிஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து மூடிஸ் நிறுவனம் கூறுகையில், “சேவைத் துறையின் வளர்ச்சியாலும் மத்திய அரசின் மூலதன செலவினத்தின் காரணமாகவும் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், ஒட்டுமொத்த அளவில் 2023-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x