Published : 30 Aug 2023 06:49 AM
Last Updated : 30 Aug 2023 06:49 AM

குஜராத்தில் கோடீஸ்வரர் எண்ணிக்கை 49% அதிகரிப்பு

அகமதாபாத்: குஜராத்தில் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 49% அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 2021-22 மதிப்பீட்டு ஆண்டில் குஜராத்தைச் சேர்ந்த 9,300 பேர் ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் வருவாய் ஈட்டியதாக தங்கள் வருமான வரி தாக்கல் படிவத்தில் தெரிவித்திருந்தனர். இது 2022-23 மதிப்பீட்டு ஆண்டில் 49% அதிகரித்துள்ளது. அதாவது கூடுதலாக 4,500 பேர் (மொத்தம் 13,800) ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியதாக தெரிவித்திருந்தனர். கடந்த 5 ஆண்டுக்கு முன்பு 7 ஆயிரமாக இருந்த இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது.

இதுபோல கார்ப்பரேட் நிறுவன பிரிவில் புதிதாக சுமார் ஆயிரம் கோடீஸ்வரர்கள் உருவாகி உள்ளனர். அதாவது 2021-22-ல் 3,700 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2022-23-ல் 4,700 ஆக அதிகரித்துள்ளது. இது 28% உயர்வு ஆகும்.

குஜராத்தில் 2021-22-ல் வரி செலுத்திய தனிநபர்கள் எண்ணிக்கை 71.2 லட்சமாக இருந்தது. இது அடுத்த ஆண்டில் 4% அதிகரித்து 73.8 லட்சமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x