Published : 21 Jul 2014 10:34 AM
Last Updated : 21 Jul 2014 10:34 AM

டெல்லியில் ஆட்சியமைக்குமா பாஜக?: ராஜ்நாத்துடன் மாநில தலைவர் ஆலோசனை

டெல்லியில் ஆட்சியமைப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயா, ஞாயிற்றுக்கிழமை சுமார் ஒரு மணி நேரம் விவாதித் தார்.

இது தொடர்பாக சதீஷ் உபாத் யாயா கூறியதாவது: டெல்லியில் ஆட்சியமைக்க அழைக்கப்பட் டால், அதை ஏற்பதா, மறுப் பதா என்பது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்.

ஆட்சியமைக்கக் கோரி இதுவரை அழைப்பு வரவில்லை. எது நடந்தாலும் அது அரசியல் சட்டத்துக்கு உட்பட்டே நடக்கும். ஆட்சியமைப்பதற்கான பரிந்துரை வந்தால், அதுகுறித்து முடிவு செய்வோம். பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான எண்ணிக்கை பற்றி, ஆட்சியமைக்க அழைப்பு வந்த பின்னரே கட்சி அறிவிக்கும், என்றார்.

மீண்டும் தேர்தலைச் சந்திக்க பல எம்எல்ஏக்கள் தயங்குவதாக, ராஜ்நாத் சிங்கிடம் சதீஷ் உபாத்யாயா கூறியதாகத் தெரிகி றது. இருப்பினும் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், ஆட்சி யமைக்காமல் மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளனர். மக்களவைத் தேர்தலில் டெல்லியின் 60 சட்டசபைத் தொகுதிகளில் பாஜக முதலிடம் பிடித்ததை மூத்த தலைவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

டெல்லியில் ஆட்சியமைக்கக் கூடாது என ஆர்எஸ்எஸ் வலியுறுத் தியதாக வெளியான தகவல்களை பாஜக மறுத்துள்ளது. அண்மை யில் பாஜகவில் இணைந்த ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் ராம் மாதவ், ‘அதுபோன்ற அறிவுறுத்தலை ஆர்எஸ்எஸ் செய்யவில்லை. அது தவறான தகவல்’ எனக் கூறியுள்ளார்.

தேர்தலை சந்திக்கத் தயார்

இதுதொடர்பாக உபாத்யாயா கூறும்போது, “நாளையே தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள கட்சி முழு அளவில் தயாராக உள்ளது. டெல்லியில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெறுவோம் என்பதில் நம்பிக்கை யுடன் உள்ளோம்” என்றார்.

மூத்த தலைவர் ஒருவர் கூறும் போது, “மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த வெள்ளிக் கிழமை தாக்கல் செய்த டெல்லி மாநில பட்ஜெட்டில், ரூ.260 கோடி அளவுக்கு மின்சாரத்துக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல்ரீதியாக பெரும் உதவிபுரியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x