Last Updated : 10 Dec, 2017 04:55 PM

 

Published : 10 Dec 2017 04:55 PM
Last Updated : 10 Dec 2017 04:55 PM

டெங்கு காய்ச்சலில் மகள் மரணம்: தந்தையின் கோரிக்கையை ஏற்று ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழு வயது குழந்தை மரணமடைந்ததால் ஒரு உயிர் போகக் காரணமாக இருந்ததாக, சிகிச்சை அளித்த குரூக்ராம் ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் தொடக்கத்தில் ஹரியாணா மாநிலத்தில் டெங்குக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஏழவயது பெண்குழந்தை சிகிச்சைப் பலனின்றி இறந்ததாகக் கூறப்பட்டது. இம்மரணத்திற்கு சிகிச்சையளித்துவந்த மருத்துவமனையே காரணம் என டெங்கு காய்ச்சலில் மரணமடைந்த மகளின் தந்தை காவல் நிலையத்தில் அளித்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு:

ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் ஞாயிற்றுக்கிழமை காலையில் ட்வீட்டரில், ''ஹரியாணா சுகாதாரத்துறை புகாரின்பேரில், குருக்கிராமில் உள்ள

போர்டிஸ் மருத்துவமனைக்கு எதிராக ஸுஷாந்த் லோக் குருக்கிராம் காவல் நிலையத்தில் 304 பிரிவின்கீழ் பாகம் 2ன்படி வழக்கு எண்.639ல் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

ஸுஷாந்த் காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் கௌரவ் போகத் கூறுகையில், இந்த எப்ஃஐஆர் சனிக்கிழமை இரவு பதிவுசெய்யப்பட்டது. மேலும் இதில் டாக்டர் விகாஸ் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.

பாதிக்கப்பட்டவரின் தந்தை ஜெயந்த் சிங் டிசம்பர் 8ந் தேதி குருக்கிராம் காவல் நிலையத்தில் முறையான புகார் ஒன்றை அளித்தார். அதில் பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு கோரியிருந்தார்.

அனைவருமே குற்றவாளிகள்

அவரது 11 பக்க புகாரில் செக்டர் 12, துவாரகா முகவரியில் உள்ள எப்எம்ஆர்ஐ நிர்வாகம், சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருமே தனது மகளை கொடூரமாகக் கொன்றுள்ளனர். மேலும் தவறான சிகிச்சைக்கான சான்றுகளை அழிக்கும்பணியில் ஈடுபட்டதால் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும். இம் மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், பணியாளர்கள் அனைவரும் மோசடித்தனம் மற்றும் குற்றவியல் சதித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் முக்கியக் குற்றவாளி டாக்டர் விகாஸ்தான். எனது மகளுக்கு வைக்கப்பட்டிருந்த காற்றோட்டக்குழாய் மற்றும் சுவாசக்குழாய் வால்வுகளை அகற்றியதுதான் அவர் மரணமடையக் காரணம். இதனால் உயிர்காக்கும் உபகரணங்களை அகற்றிய சில நிமிடங்களுக்குள் அவர் மூச்சுத்திணறி இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

மருத்துவமனை நிலம் குத்தகை ஒப்பந்தம் ரத்து

ஹரியாணா சுகாதாரத் துறை உத்தரவின்படி பதிவு செய்யப்பட்டுள்ள எப்ஃப்ஐஆருடன் சிங் அளித்துள்ள புகார் மனு இணைக்கப்படும் என்று பொபாட் கூறியுள்ளார்

குருக்கிராமில் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட மருத்துவமனை அமைந்துள்ள நிலத்திற்கு அளிக்கப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீயுள்ளதாகக் கூறி அதை ரத்து செய்ய வேண்டுமெனக் கூறி சுகாதார துறை, ஹரியானா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்துக்கு கடிதம் வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x