Published : 24 Aug 2023 05:33 AM
Last Updated : 24 Aug 2023 05:33 AM

சர்வதேச அளவில் இஸ்ரோவின் அந்தஸ்தை உயர்த்திய சந்திரயான்-3: திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பெருமிதம்

சென்னை: சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், விழுப்புரத்தை சேர்ந்தவர்.

சந்திரயான்-3 வெற்றிபயணத்தை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இஸ்ரோ குழுவினருக்கு இதுமகிழ்ச்சியான தருணம். இத்திட்டத்தை வெற்றிகரமாக சாத்தியப்படுத்தியது திருப்தி அளிக்கிறது. திட்டம் தொடக்கம் முதல் தரையிறக்கம் வரை எவ்வித சிக்கலும் இன்றி திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளது. நிலவில்தரையிறங்கிய 4-வது நாடு, தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் பெருமையை பெற்றுள்ளோம். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. உலக அளவில் இஸ்ரோவின் மதிப்பு, அந்தஸ்தை சந்திரயான்-3 திட்டம் உயர்த்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்கள் உற்சாகம்: நிலவில் சந்திரயான் தரையிறங்கியதை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், அறிவியல் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர். இஸ்ரோ வலைதளங்கள், டிடி நேஷனல் தொலைக்காட்சி மூலமாகவும் ஏராளமானோர் நேரலையில் பார்த்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x