Published : 21 Dec 2017 08:39 AM
Last Updated : 21 Dec 2017 08:39 AM

ஹைதராபாத் ஜுசைன் சாகர் ஏரியில் அமைந்துள்ள புத்தர் சிலையை பார்வையிட்ட குடியரசு தலைவர் ராம்நாத்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் மையப்பகுதியில் ஹுசைன் சாகர் ஏரியில் அமைந்துள்ள புத்தர் சிலையை நேற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த பார்வையிட்டார்.

ஹைதராபாத்தில் கடந்த 1563ம் ஆண்டு, இப்ரஹிம் குலி குதூப் ஷா எனும் நிஜாம் மன்னரால், இதய வடிவில் அமைக்கப்பட்ட ஏரி ஹுசைன் சாகர் என தற்போது அழைக்கப்படுகிறது. இந்த ஏரியின் மையப்பகுதியில் 1992ம் ஆண்டு 18 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமான வெள்ளை கிரானைட் கல்லால் புத்தர் சிலை நிறுவப்பட்டது. இது ஒரு சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. மையப் பகுதியில் உள்ள இந்த புத்தர் சிலை பகுதிக்கு படகு மூலம் செல்லலாம்.

இந்நிலையில், உலக தெலுங்கு மாநாட்டில் பங்கேற்க ஹைதராபாத் வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்று காலை ஹுசைன் சாகர் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை பார்வையிட்டார். இதனையொட்டி, இந்த பகுதியில் நேற்று காலை பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதன்பின்னர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் நரசிம்மன், தெலங்கானா மாநில துணை முதல்வர் முகமது அலி மற்றும் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x