Published : 23 Aug 2023 10:25 AM
Last Updated : 23 Aug 2023 10:25 AM

29-ல் மணிப்பூர் சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர்

இம்பால்: மணிப்பூர் சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி கூடவுள்ளது.

மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் அனுசுயா உய்கே நேற்று வெளியிட்டுள்ளார். மணிப்பூர் சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பாக மாநில அமைச்சரவையின் 2 பரிந்துரைகளை ஆளுநர் ஏற்கெனவே ஏற்கவில்லை.

மாநிலத்தின் வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில் 7 பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 10 குகி எம்எல்ஏக்கள் பேரவை கூட்டத்தில் பங்கேற்க இயலாது என அறிவித்ததால் சட்டப்பேரவை கூட்டப்படவில்லை என கூறப்படுகிறது. விதிகளின்படி மாநில சட்டப்பேரவைகள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 அமர்வுகள் கூடவேண்டும். இதன்படி மணிப்பூரில் அடுத்த அமர்வு செப்டம்பர் 2-ம் தேதிக்குள் கூடவேண்டிது கட்டாயம் ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x