Published : 21 Aug 2023 07:53 PM
Last Updated : 21 Aug 2023 07:53 PM

சந்திரயானை ட்ரோல் செய்து பிரகாஷ் ராஜ் ட்வீட்: கொந்தளித்த நெட்டிசன்கள்!

கோப்புப்படம்

பெங்களூரு: சந்திரயான்-3 மிஷனை ட்ரோல் செய்யும் வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் எனும் ட்விட்டர் சமூக வலைதளத்தில் ட்வீட் செய்திருந்தார். அதாவது, ‘உலகில் எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கே ஒரு கேரள மாநிலத்தவர் தேநீர் கடை வைத்திருப்பார். அதுபோலவே, நிலவிலும் ஒருவர் தேநீர் விற்றுக்கொண்டிருப்பார்’ என பொருள்படும் வகையில் பிரகாஷ் ராஜின் ட்ரோல் அமைந்தது. இந்நிலையில், அவருக்கு பாடம் புகட்டும் வகையில், கொந்தளிப்புடன் நெட்டிசன்கள் அவரது ட்வீட்டுக்கு எதிர்வினை ஆற்றியுள்ளனர்.

நாளை மறுநாள் மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 மிஷனின் இலக்காக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. தொடர்ந்து அதிலிருந்து பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது. இதில் இந்த முறை எந்த சிக்கலும் இருக்காது என இஸ்ரோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ், சந்திரயான் குறித்து ட்வீட் செய்திருந்தார். “பிரேக்கிங் நியூஸ்: விக்ரம் லேண்டர் மூலம் சந்திரனில் இருந்து வரும் முதல் படம். வாவ். சும்மா கேட்டேன்” என சொல்லி ஒரு நபர் டீ ஆற்றும் கார்ட்டூனை அவர் அதில் தெரிவித்திருந்தார்.

அதற்கு நெட்டிசன்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். “இஸ்ரோ இந்தியாவின் சிறப்பை குறிக்கிறது. இஸ்ரோ உலகின் தலைசிறந்த ஆய்வு நிறுவனங்களில் ஒன்று. இருக்கும் வளங்களை கொண்டு நிகழ்த்தியுள்ள சாதனை இது. தனக்கு அனைத்தும் கொடுத்த தேசத்தை இந்த மனிதர் வெறுக்கிறார்” என பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் தனி ஒருவரை வெறுக்க தொடங்கியவுடன் அனைத்தையும் வெறுக்க தொடங்குகிறீர்கள். தனி ஒருவர், கொள்கை, சித்தாந்தம் போன்றவற்றுடன் தேசத்தின் சாதனையை மறந்துவிட்டீர்கள். திறமையான நடிகர் இப்படி இயங்குவது வருத்தம் தருகிறது” என ஸ்டேண்ட்-அப் காமெடியன் அபூர்வ் குப்தா தெரிவித்துள்ளார்.

“ரஷ்யாவின் லூனா-25 நிலவில் மோதி நொறுங்கியது. ஆனால், அதை எந்த ரஷ்யரும் ட்ரோல் செய்யவில்லை. சந்திரயான்-2 தோல்வி அடைந்த போது ஏராளமான இந்தியர்கள் கேலியும், மகிழ்ச்சியும் அடைந்தனர். இது ஒரு சிலரின் குணாதிசயத்தை காட்டுகிறது” என பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“சார், இங்கு அரசியல் பார்வை வேண்டாம் ப்ளீஸ். சந்திரயான் இந்தியாவின் பெருமை” என மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் விளக்கம்: இந்த சர்ச்சைக்குப் பிறகு, “வெறுப்புணர்வு கொண்டவர்கள் வெறுப்பை மட்டுமே பார்ப்பார்கள். கேரள டீக்கடைக்காரை கொண்டாடும் வகையிலான ஆர்ம்ஸ்ட்ராங் காலத்து ஜோக்கைதான் நான் குறிப்பிட்டேன். இது உங்களுக்கு ஜோக் ஆக தெரியவில்லை என்றால் அந்த ஜோக்கே உங்கள் மீதுதான். வளருங்கள். ஜஸ்ட் ஆஸ்கிங்!” என தனது முந்தைய ட்வீட்டுக்கு விளக்கம் கொடுத்து சுமார் 23 மணி நேரத்துக்கு பிறகு பிரகாஷ் ராஜ் ட்வீட் செய்துள்ளார்.

— APPURV GUPTA (@appurv_gupta) August 21, 2023

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x