Published : 20 Aug 2023 07:10 AM
Last Updated : 20 Aug 2023 07:10 AM

பனி லிங்கம் உருகிய பிறகும் அமர்நாத் வரும் பக்தர்கள்

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயில் உள்ளது. இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர்.

இந்த ஆண்டு 62 நாட்களுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்தஜூலை 1-ம் தேதி தொடங்கியது.வரும் 31-ம் தேதி யாத்திரை முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்தஆண்டு வெப்பநிலை அதிகரித்ததால் யாத்திரை முடிவதற்கு முன்பே பனி லிங்கம் முற்றிலும் உருகிவிட்டது.

எனினும் குகை கோயிலுக்கு பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். கடந்த 15-ம் தேதி இக்கோயிலுக்கு 1,104 பேரும் 16-ம் தேதி 832 பேரும், 17-ம் தேதி 938 பேரும் வந்துள்ளனர். ஆகஸ்ட் 17 வரை இக்கோயிலுக்கு 4,38,733 பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

இதனிடையே ‘சாரி முபாரக்’ எனப்படும் சிவனின் வெள்ளி தண்டாயுதத்தை சாதுக்கள் அமர்நாத் எடுத்துச் செல்லும் யாத்திரை ஸ்ரீநகரில் கடந்த 15-ம்தேதி தொடங்கியது. வரும் 31-ம் தேதி சிரவண பவுர்ணமி மற்றும் ரக் ஷா பந்தன் நாளில் குகை கோயிலை ‘சாரி முபாரக்’ சென்றடைந்ததும் சிறப்பு பூஜையுடன் யாத்திரை நிறைவு பெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x