Published : 29 Dec 2017 03:09 PM
Last Updated : 29 Dec 2017 03:09 PM
இமாச்சலப் பிரதேசத்தில், தன்னை கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வை பெண் போலீஸ் ஒருவர் உடனடியாக திருப்பி அறைந்த சம்பவம் நடந்துள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பறிகொடுத்தது. அங்கு இப்போது பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
ராகுல் ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததால் வெளியே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது அங்கு தாமதமாக வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆஷா குமாரி தன்னை கூட்டம் நடக்கும் கூடத்துக்குள் அனுமதிக்குமாறு கோரினார். இதுதொடர்பாக அங்கிருந்த பெண் காவலர் ஒருவருடன் ஆஷாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த எம்.எல்.ஏ., அந்த பெண் காவலரை கன்னத்தில் அறைந்தார். இதனையடுத்து இமைப்பொழுதில் அந்த பெண் காவலரும் எம்.எல்.ஏ.,வை திருப்பி கன்னத்தில் அறைந்தார். இதனை சற்றும் எதிர்பாராத எம்.எல்.ஏ., அதிர்ந்து போனார்.
ஏ.என்.ஐ., வீடியோ இணைப்பு:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT