Published : 19 Aug 2023 05:58 AM
Last Updated : 19 Aug 2023 05:58 AM

மணிப்பூரில் மீண்டும் வன்முறை - இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை சம்பவங்களில் சிக்கி நேற்று 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

மைத்தேயி இனத்தவர் எஸ்டி அந்தஸ்து கோரிக்கைக்கு குகி இனத்தவர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மணிப்பூரில் மே 3-ம் தேதி கலவரம் மூண்டது. மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த வன்முறை பாதுகாப்பு படையினரின் கடும் நடவடிக்கைகளுக்குப் பிறகு சற்று ஓய்ந்திருந்தது. இந்த நிலையில், அங்கு மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தோவாய் கிராமத்தில் நேற்று கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. லிட்டன் காவல் நிலையத்துக்குள்பட்ட அந்த பகுதியில் அதிகாலையில் துப்பாக்கி சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

உடல்கள் மீட்பு: இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து சிதிலமடைந்திருந்த நிலையில் மூன்று இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு வயது 24 முதல் 35 வயதுக்குள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறையாளர்களை பிடிக்க கிராமங்கள் மட்டுமின்றி காட்டுப் பகுதிகளிலும் போலீஸார் முற்றுகையிட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த மூன்று பேரின் உடல்களிலும் கூர்மையான கத்திகளால் தாக்கப்பட்ட காயங்கள்உள்ளன. அத்துடன் அவர்களதுகைகால்களும் வெட்டப்பட்டுஉள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணிப்பூரில் மொத்த மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர்மைத்தேயி இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகளில் வசித்து வருகின்றனர். அதேபோன்று, 40 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் நாகா, குகி பழங்குடியினத்தவர்கள் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர். இவர்கள் மைத்தேயி இனத்தவர்களுக்குஎஸ்டி அந்தஸ்து வழங்கக்கூடாது என்று கலவரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x