Published : 16 Aug 2023 07:58 AM
Last Updated : 16 Aug 2023 07:58 AM
புதுடெல்லி: அடுத்த ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றுவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாட்டின் 77-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடிஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:
மனித வளம், ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகியவை இந்தியாவின் அனைத்து கனவுகளையும் நனவாக்கும் வல்லமை கொண்டது. உலகளாவிய அளவில்30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் அதிகம் வசிக்கும் நாடு என்றபெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. நாட்டின் இளைய தலைமுறையால் எதையும் சாதிக்க முடியும்.
உலக அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்க உகந்தநாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த சாதனைக்கு இந்திய இளைஞர்களே காரணம். வரும் நூற்றாண்டில் தொழில்நுட்பமே கோலோச்சும். இந்த தொழில்நுட்ப நூற்றாண்டில் இந்திய இளைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. இதன்படி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் ஜி-20 மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மாநாடுகளின்மூலம் சாமானிய இந்தியர்களின்திறனை உலகுக்கு பறைசாற்றப்பட்டு வருகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை உலகத்துக்கு எடுத்துரைக்கப்படுகிறது.
இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் அதிவேக பொருளாதார வளர்ச்சி தொடரும் என்று பல்வேறு உலக அமைப்புகள் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போருக்குப்பிறகு உலகளாவிய அளவில் புதிய ஒழுங்கு முறை உருவானது.இதேபோல கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு புதிய ஒழுங்கு முறை உருவாகி உள்ளது. கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் திறனை பார்த்து உலகம் வியந்தது. கரோனா காலத்துக்குப் பிறகுமாறிவரும் உலகை வடிவமைப்பதில் இந்தியாவின் திறமை தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது.
உலகளாவிய தெற்கு நாடுகளின்குரலாக இந்தியா உருவெடுத்துள்ளது. சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இப்போது இந்தியாவின் பக்கம் பந்து இருக்கிறது. இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது.
மத்தியில் வலுவான ஆட்சி: இந்தியாவின் 30 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இருந்து இந்திய மக்கள் தெளிவான பாடத்தை கற்றனர். அதாவது நாடு வளர்ச்சி அடைய மத்தியில் வலுவான அரசு அமைய வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்தனர். இதன்காரணமாக கடந்த 2014-ம் ஆண்டில் மத்தியில் வலுவான ஆட்சி அமைய ஆதரவாக மக்கள் வாக்களித்தனர்.
நாட்டுக்கு முதலிடம் என்ற லட்சியத்துடன் மத்திய அரசு செயல்பட்டது. ஒரு பைசாகூட வீணாகாமல் மக்களின் வரிப் பணம்நாட்டின் வளர்ச்சிக்காக செலவிடப்பட்டது. மத்திய அரசு மீதான நம்பிக்கை காரணமாக கடந்த 2019-ம் ஆண்டிலும் மத்தியில் வலுவான ஆட்சி அமைய மக்கள் வாக்களித்தனர். மக்களின் நல்லாசியுடன் அடுத்த ஆண்டு சுதந்திரதின விழாவின்போதும் செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றுவேன்.
மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு புதிதாக திறன் மேம்பாட்டுத் துறை உருவாக்கப்பட்டது. இதன்மூலம் தொழில் திறன்வாய்ந்த இளைஞர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். இந்த இளைஞர்கள் இந்தியாவின் கனவுகளை மட்டுமன்றி உலகத்தின் கனவுகளையும் பூர்த்தி செய்கின்றனனர்.
இதேபோல ஜல் சக்தி துறை புதிதாக உருவாக்கப்பட்டது. இந்ததுறையின் மூலம் வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. சுகாதார தேவையை கருத்தில் கொண்டு தனியாக ஆயுஷ், யோகா துறை உருவாக்கப்பட்டது. இதன்பிறகு இந்தியாவின் ஆயுர்வேதம், யோகா உலக ளாவிய அளவில் பிரபலமாகி வருகின்றன.
மீனவ குடும்பங்களின் நலனுக்காக மத்திய அரசில் புதிதாக மீன் வளத் துறை உருவாக்கப்பட்டது. கூட்டுறவுத் துறையின் நலனுக்காக புதிய துறை உருவாக்கப்பட்டது. இவை போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளால் நாடு அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஊழலால் பின்னடைவு: கடந்த காலத்தில் நடைபெற்றஊழல்களால் நாட்டின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. எனது தலைமையிலான அரசு மத்தியில் பதவியேற்ற பிறகு ஊழலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. இதன்மூலம் வலுவான பொருளாதாரம் உருவானது. ஏழைகளின் முன்னேற்றத் துக்காக பெரும் தொகை செல விடப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் வந்தே பாரத் அதிவேக ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக புல்லட் ரயில் அறிமுகம் செய்யப் பட உள்ளது. வேளாண் துறை வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக் கப்பட்டு வருகிறது.
நானோ யூரியா, நானோ டிஏபிஉரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றனர். இயற்கை வேளாண்மையில் ஈடுபட விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. நாட்டில் செமி கண்டக்டர் உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் 5ஜி சேவை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் சுமார் 700-க்கும் மேற்பட்டமாவட்டங்களுக்கு 5 ஜி சேவைவிரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அடுத்தகட்டமாக 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய முனைப்பு காட்டப்படுகிறது. தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத் துக்கு முன்பு நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
ஒரு காலத்தில் நாடு முழுவதும் தீவிரவாத தாக்குதல்கள் அதிகமாக இருந்தன. இப்போது தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டு மக்கள் பாதுகாப்பான சூழலில் வாழ்கின்றனர்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT