Last Updated : 07 Nov, 2017 04:41 PM

 

Published : 07 Nov 2017 04:41 PM
Last Updated : 07 Nov 2017 04:41 PM

விபத்தில் சிக்கி பக்கவாதம் பாதித்த இளைய சகோதரருக்காக போராடும் மூத்த சகோதரர்

டெல்லியில் நவம்பர் 2016-ல் விபத்தில் சிக்கி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தன் இளைய சகோதரனுக்காக 35 வயது மூத்த சகோதரர் விகாஸ் ராய் போராடி வருகிறார்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் சிகிச்சைக்கு வேண்டிய பணத்தை திரட்டி இதுவரை தங்கள் சக்தியை மீறி ரூ.1.75 கோடி செலவழித்துள்ளனர்.

ஒருவாரம் முன்னதாக விவேக் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். ஆனாலும் மாதமொன்றுக்கு மறுவாழ்வு சிகிச்சைக்காக ரூ.1.5 லட்சம் மேலும் தேவைப்படுகிறது.

சகோதரனுக்காக போராடும் விகாஸ் ராய் கூறும்போது, “எங்கள் சொத்துக்கள் அனைத்தும், தங்கம், வீடு, கார், அலுவலகத்தில் முன்பணம் என்று அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்தி விட்டோம். அதாவது தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை செலவுகளை இவ்வாறு எதிர்கொண்டோம். இப்போது எங்களிடம் எதுவும் இல்லை. இதனால் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளோம். என் சகோதரர் அவரது 3 வயது பெண் குழந்தைக்காக ஆரோக்கியமான வாழ்வுக்கு உயிர்ப்புடன் திரும்ப வேண்டியுள்ளது” என்றார், இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

விகாஸ் ராய், இம்பாக்ட்குரு டாட் காம் மூலம் பொதுமக்களிடமிருந்து பணம் திரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டார். இதுவரை ரூ.5.5 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது. ஆனால் மாதமொன்றுக்கு 1.5 லட்சம் தேவைப்படுவதால் இதுவும் போதாது என்ற நிலை உள்ளது.

“நானும் என் தந்தையும் உழைத்து வருகிறோம், இதனால் வீட்டுச் செலவுகளும், சகோதரர் சிகிச்சையும் தடைபடக்கூடாது, ஆனால் எங்களுக்கு உதவி தேவைப்படுகிறது, அவசரமாகத் தேவைப்படுகிறது. தினசரி மருத்துவச் செலவுகள், சிறப்புச் சிகிச்சைகள் என்று செலவுகள் அதிகரித்து வருகிறது. எங்கள் சேமிப்புகளும் செலவாகிவிட்டன. மருத்துவர்கள் என் சகோதரர் நிச்சயம் பழைய நிலைக்குத் திரும்புவார் என்று நம்பிக்கை அளித்துள்ளார். அதனால்தான் இப்படிப்பாடுபடுகிறோம்” என்றார்.

தீபாவளி முடிந்து 2 நாட்களுக்குப் பிறகு விவேக் விபத்தில் சிக்கினார். பரிதாபாத்தில் வீட்டிலிருந்து 2 கிமீ தூரத்தில் இவரது பைக் காருடன் மோதியது, இதனையடுத்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பக்கவாதம் பாதித்தது. தற்போது விவேக் 30 தேறியுள்ளார், முறையான சிகிச்சை மூலம் 90% குணமடைவார் என்று குடும்பத்தாரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துக் குறித்து இன்னமும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை. “நாங்கள் மருத்துவமனை, சிகிச்சை என்று அலைந்து கொண்டிருக்கிறோம், விரைவில் புகார் பதிவு செய்வோம்” என்றார் மூத்த சகோதரர் விகாஸ் ராய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x