Published : 16 Nov 2017 01:19 PM
Last Updated : 16 Nov 2017 01:19 PM
உத்தரப் பிரதேசத்தில் மணமகன் ஒருவர் தனது திருமணம் என்றும் நினைவு கொள்ளத்தக்கதாக இருக்கும் வகையில் இருப்பதற்காக ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார்.
இந்த சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹாபூர் என்ற நகரில் நடந்துள்ளது. பொதுவாக வட இந்தியாவில் திருமணத்தின்போது மணமகன் வெள்ளை நிற குதிரையில்தான் திருமணத்துக்கு வருவார்.
ஆனால் தனது திருமணத்தை வித்தியாசமான முறையில் நினைவு கொள்ள எண்ணிய மணமகன் ஒருவர் குதிரைக்கு பதிலாக ஹெலிகாப்டரில் வந்திறங்கியுள்ளார்.
பெரும் கூட்டம் மணமகனுக்காக காத்திருக்க, ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மணமகன் மணமகளை அழைத்துச் சென்றார்.
ஹெலிகாப்டர் வந்திறங்கிய பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT