Published : 12 Nov 2017 09:54 AM
Last Updated : 12 Nov 2017 09:54 AM

ஆந்திராவில் 4 மாடி கட்டிடம் தரைமட்டம்

ஆந்திர மாநிலம், குண்டூர் நகரின் பிரதான சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பழைய குண்டூர் பகுதியில் உள்ள மணி ஓட்டல் கூட்டு ரோடு பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த 4 மாடி கட்டிடத்தின் முன்பகுதியை தொழிலாளர்கள் இடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென கட்டிடம் சரிந்தது. தொழிலாளர்களும் மக்களும் அங்கிருந்து ஓடினர். கட்டிடம் தரை மட்டமானாலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x