Published : 16 Jul 2014 09:00 AM
Last Updated : 16 Jul 2014 09:00 AM

பிஹாரில் மீண்டும் லாலு பிரசாத்- நிதிஷ்குமார் கூட்டணி: ‘கமண்டலை எதிர்க்கும் மண்டல்’ கோஷத்துடன் தொடக்கம்

பிஹார் சட்டசபை தேர்தலில் லாலு பிரசாத் யாதவுடன் நிதிஷ்குமார் கூட்டணி உறுதியாகி உள்ளது. கடந்த 1990-ம் ஆண்டுகளில் மண்டல் என்ற பெயரில் உயர் வகுப் பினருக்கு எதிராக ஒன்றிணைந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு சார்ந்த கட்சிகள் மீண்டும் அதே பாணி அரசி யலைக் கையிலெடுத்துள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் நிதிஷ்குமார் திங்கள்கிழமை கூறும்போது, “சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட அனைவருடனும் கூட்டு சேர்ந்து ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும். கட்சியின் இந்த ஒட்டு மொத்த முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். இதை எதிர்ப்பவர்கள் தாரளமாக வெளியேறலாம். இது, தற்போது நிலவும் அரசியல் சூழலின் கட்டாயம்” என்றார்.

இவர்கள் கூட்டணி குறித்து லாலு, இரண்டு முறை மேடை களில் பேசியதை அடுத்து முதன் முறையாக நிதிஷ் இதை அறி வித்துள்ளார். நிதிஷுக்கு நெருக்க மானவரும், கட்சியின் மூத்த தலைவருமான ராஜீவ் ரஞ்சன் சிங் சில நாட்களுக்கு முன் நிதிஷுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், லாலுவுடன் கூட்டணி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து நிதிஷ்குமாரின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1990-ம் ஆண்டுகளில் மண்டல் கமிஷனை எதிர்த்த பாஜக வுக்கு, ’கமண்டலை (இந்துத்வா) எதிர்க்கும்மண்டல்’ என்ற கோஷத் துடன் லாலுவும் நித்திஷும் ஒன்றாக வி.பி.சிங்கின் கட்சியில் இருந்து போராட்டம் நடத்தினர். அதே போல், கமண்டலை எதிர்த்து மதநல்லிணக்கக் கட்சிகள் என்ற பெயரில் இப்போது கூட்டு சேர முடிவு செய்துள்ளதாகக் கருதப் படுகிறது. பிஹாரில் பாஜகவின் கூட்டணியுடன் தொடர்ந்து இரண்டா வது முறையாக ஆட்சியை பிடித்த நிதிஷ், நரேந்திர மோடி பிரதமராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்தார். இதனால், தேசிய ஜனநாயக கூட் டணியிலிருந்து வெளியேறி மக்கள வைத் தேர்தலில் தனித்து போட்டி யிட்டு படுதோல்வியடைந்தார்.

மண்டல் ரயிலில் தகுதியானவர்கள் ஏறலாம்: லாலு

லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அரசியல் சதியால் என்னை ஊழல் வழக்கில் சிக்க வைத்துள்ளனர்.

கமண்டலத்திற்கு (பாஜக) தக்க பதில் அளிக்கும் பொருட்டு, மண்டல் சிந்தனை உள்ளவர்கள் ஒன்று சேர வேண்டிய அரசியல் தருணம் இது. கமண்டலத்திடம் இருந்து நாட்டின் சமூகநீதியை காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மண்டல் ரயில் கிளம்பத் தயாராகி விட்டது.

இதில், பயணம் செய்ய விரும்புபவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் இல்லாதவர்கள் ரயிலை தவற விடுவார்கள்.

‘நிதிஷ் குமார் எப்போதும் மத நல்லிணக்க இயல்புடையவர்தான். அவர் பாஜகவுடன் இணைந்து, அக்கட்சியை தேவையின்றி பிஹாரில் வளர்த்துவிட்டார். இப்போது, அவர் பாஜகவை விவாகரத்து செய்தது, அவருக்கான வாக்குகள் பிரிய வழிவகுத்து விட்டது. நாங்கள் ஒன்று சேர்ந்து மாநிலங்களவைத் தேர்தலில் தோற்கடித்தது, சுயேச்சை வேட்பாளர்களை அல்ல, அவர்களுக்கு ஆதரவாக இருந்த பாஜகவைத்தான்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x