Last Updated : 19 Nov, 2017 04:33 PM

 

Published : 19 Nov 2017 04:33 PM
Last Updated : 19 Nov 2017 04:33 PM

ஸ்ரீநகர் தாக்குதலுக்கு ஐஎஸ் நிறுவனம் அமாக் பொறுப்பேற்பு

ஸ்ரீநகரின் புறநகர் ஸாகுரா பகுதியில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஐஎஸ் செய்தி நிறுவனம் 'அமாக்' பொறுப்பேற்றுள்ளது.

இதுகுறித்து 'சைட் இன்டல் குரூப்' எனப்படும் தீவிரவாதிகள் நடத்தும் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், ''ஸ்ரீநகர் அருகே நவம்பர் 17 அன்று நடைபெற்ற ஸாகுரா தாக்குதலுக்கு ஐஎஸ் ஆதரவு செய்தி நிறுவனம் 'அமாக்' பொறுப்பேற்றுள்ளது. இத்தாக்குதலில் உள்ளூர் போராளி ஒருவரும் காவல் துணை ஆய்வாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பாதுகாப்புத் துறைகள் மிர் என்பவருக்கு சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து இயக்கப்படும் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பு உண்டு என உறுதிப்படுத்தியுள்ளன. காவல்துறையினரின் தகவலின்படி, ஜாகீர் மூசாவின் தலைமையின்கீழ் இயங்கும் தீவிரவாதக் குழுவில் மிர் சேர்க்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.

இத்தாக்குதல் மூசாவின் குழுவினரால் முதல்முறையாக நடத்தப்பட்டுள்ளது. இவர்களின் அமைப்பான அன்சார் கஸ்வாத் உல் ஹிந்த், அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் பிரிவொன்றை தலைமை ஏற்று நடத்துவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஸாகுரா எனப்படும் காஷ்மீரின் புறநகரில் தீவிரவாதி தாசீப் அஹ்மத் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் டெஹ்ரீக் உல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் சண்டையின்போது இறந்த மிர் எங்கள் குழுவைச் சேர்ந்த போராளி, ஒரு மாவட்டத் தளபதியும்கூட. அன்சார் உல் ஹிந்த் அமைப்பும் அல் கொய்தா அமைப்பும் இணைந்தால் காஷ்மீர் போராட்டத்தையே உருக்குலைத்துவிடும் என்பதால் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

இருப்பினும், நவம்பர் 18-ம் தேதி மிர் இறுதிச் சடங்கில், ஐஎஸ் தீவிரவாதக் குழுக்கள் பயன்படுத்துவதைப் போன்ற கருப்புக் கொடியை பெண்கள் உயர்த்திப் பிடித்து வந்தனர். மிர் உடல் மீது அவரது ஆதரவாளர்களால் கருப்புக்கொடி போர்த்தப்பட்டிருந்தது. மிர் ஆதரவாளர்கள், இஸ்லாமிய சார்பு மற்றும் சுதந்திர சார்புக் கோஷங்களை எழுப்பி வந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x