Published : 07 Nov 2017 10:48 AM
Last Updated : 07 Nov 2017 10:48 AM
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று 6 மாத கால பாத யாத்திரையை தொடங்கினார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதன் அவசியத்தையும் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி அரசின் குறைகளையும் மக்களிடம் விளக்கும் வகையில் ஜெகன் பாத யாத்திரை செல்ல திட்டமிட்டிருந்தார்.
‘பிரஜா சங்கல்ப யாத்திரா’ என்ற பெயரிலான இந்த பாதயாத்திரையை அவர் நேற்று கடப்பா மாவட்டம், இடுபுலபாயா பகுதியில் தொடங்கினார். இடுபுலபாயா பகுதியில் ஜெகனின் தந்தையும் முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சமாதி உள்ளது. இங்கு ஜெகன் நேற்று அஞ்சலி செலுத்திய பின், தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பாத யாத்திரை புறப்பட்டார்.
இந்த பாத யாத்திரையை ஜெகன் சுமார் 3,000 கி.மீ. தொலைவுக்கு 180 நாட்கள் மேற்கொள்கிறார்.
பாத யாத்திரையில் நேற்று வழிநெடுகிலும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர். ஜெகனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT