Published : 03 Aug 2023 06:09 PM
Last Updated : 03 Aug 2023 06:09 PM
புதுடெல்லி: பாகிஸ்தானுடன் சுமுக உறவு இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது; ஆனால் அதற்கு பயங்கரவாதம் மற்றும் விரோதம் இல்லாத சூழல் மிகவும் அவசியம் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கனிமவள உச்சிமாநாடு இஸ்லாமாபாத்தில் கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. இதன் தொடக்கவிழாவில் உரையாற்றிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "அண்டை நாடு உள்பட அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. தீவிரமான விஷயங்களைப் பேசுவதற்கு அண்டை நாடும் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில், போர் தேவையற்ற ஒன்று. அர்த்தமுள்ள விவாதங்கள் மூலம் நமது தீவிரமான பிரச்சினைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நாம் சுமுகமான அண்டை நாடுகளாக மாற முடியாது. இதை அண்டை நாடும் புரிந்துகொள்வது முக்கியம்" என்று இந்தியாவைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் காட்டி இருக்கும் விருப்பம் குறித்த கேள்விக்கு இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி பதில் அளித்தார். அப்போது அவர், “இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் பேசிய பேச்சு குறித்த செய்தியை நாங்கள் பார்த்தோம். பாகிஸ்தான் உள்பட நாம் நமது அனைத்து அண்டை நாடுகளுடன் சுமுக உறவு மேற்கொள்ள விரும்புகிறோம். நமது இந்த நிலைப்பாடு தெளிவானது; அனைவரும் நன்கு அறிந்தது. ஆனால், அதற்கு பயங்கரவாதம் மற்றும் விரோதம் இல்லாத சூழல் மிகவும் அவசியம்” என்று தெரிவித்தார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளிப்பது, காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட விஷயங்கள் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷெரீப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ள நிலையில், அவரது இந்த பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 17 Comments )
பாகிஸ்தானில் அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் கிடையாது. கடந்த முறை நவாஸ் ஷெரிப் இப்படி பேசி கொண்டு இருந்த பொழுது முஷ்ரப் கார்கில் போரை தொடுத்தார். பாகிஸ்தானிய அரசியல்வாதிகள் முதலில் அவர்களது ராணுவ அதிகாரிகளிடம் பேசட்டும்.
2
5
Reply
Chandra_USA பாக்கிஸ்தான் செத்த பாம்பா, உயிருள்ள பாம்பா எண்பத்திருக்கட்டும். அந்தப்பக்கம் சீனா எனும் அனகோண்டா சிரிக்கிறது.
0
0
சொல்லாத வார்த்தை திணிப்பா - ""நேரடியாக" இந்த பதிவின் கீழே கடைசியில் உள்ள பதிவை படித்து பார்க்கவும் - செத்த பாம்பே தான் - 1971 லேயே இந்திரா காந்தி அவர்களால் அடக்கப்பட்டுவிட்டது - தற்போது செய்வதெல்லாம் IMAGINARY CREATION OF FEAR - TO SHOW AS IF 'அவராலேயே' நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற பொய் பிம்ப பிரசாரம் - இந்த தளத்திலேயே பலர் பதிவிட்டு இருக்கின்றனர் - தொழுத கையுள்ளும் .............என்ற திருக்குறளுக்கான தற்போதைய பொருத்தமான அர்த்தம் .......... முஸ்லீம் சகோதரிகளுக்கு ரக்க்ஷா பந்தன் ..... என்னை போன்றோருக்கு நினைவாற்றல் இருக்கும் வரை இனி மனம் திருந்தி உண்மைகளை பதிவிட்டால் கூட , பழையதும் சிந்தனைக்கு வரும்.- அவ்வளவு விஷமம் வெளிப்படுத்த பட்டிருக்கிறது. .
0
0
Chandra_USA பாக்கிஸ்தான் இஸ்லாமிய தீவிரவாதம் என்றால்... இன்றைய இந்தியா, இந்துத்துவா தீவிரவாதமா? பாக்கிஸ்தான் செத்த பாம்போ, உயிருள்ள பாம்போ... பாம்பின்கால் பாம்பறியும். ஆனால் சீனா அனகோண்டா அல்லவா? அதை பார்த்தால் மட்டும் பம்முவது ஏன்? பயம் தானே?!!!
0
0
சொல்லாத வார்த்தையை திணிக்கிறீர்கள். நேரடியாக என்று சொல்லவில்லை. மோடியின் விஜயம், ஒரு நேர்மையான முயற்சி. புதிய பிரதமர், அண்டை நாடுகளுடன் உறவுகளில் ஒரு மாற்றத்தை உருவாக்க முயற்சித்தார். இன்றைக்கு பாகிஸ்தானின் பொருளாதார பிரச்சனைகளை வைத்து அவர்கள் செத்த பாம்பு என்பது உங்களது அறியாமையை தான் காட்டுகிறது. "தொழுத கையுள்ளும் படையொடுங்கும் .. " பாக்கிஸ்தான் இஸ்லாமிய தீவிரவாதம் என்னும் ஆய்தத்தை கைவிடவில்லை, பாகிஸ்தானுக்கு இந்திய இஸ்லாமிய தீவிரவாதத்தின் ஆதரவு மறைந்து விடவில்லை. பாகிஸ்தானுடன் உறவு என்பது ஆபத்து.
1
5
திரு சந்திரா அவர்களே இனி பாகிஸ்தானை வைத்து யாரும் வியாபாரம் பண்ண முடியாது - செத்த பாம்பு - திருப்பி திருப்பி அடித்தால் ஊருக்கெல்லாம் தெரிந்துவிடும் - நேரடியாக என்று ஒரு சொல்லை பயன்படுத்தியிருக்கிறீர்களே, எப்படி திடீரென அங்கு விஜயம் செய்ததையா
5
2
ஆனால்... இந்திய அரசாங்கம் விரும்பவில்லைதானே !
4
3
Reply