Published : 09 Nov 2017 09:13 AM
Last Updated : 09 Nov 2017 09:13 AM
ஆந்திராவில் இந்துசமய அறநிலைத் துறை அதிகாரி விஜயராஜு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் 537 பட்டுப் புடவைகள், சுமார் ரூ. 10 கோடி நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டன
விஜயராஜு தற்போது விஜயவாடாவில் பணியாற்றி வருகிறார்.
இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வந்த புகாரின் பேரில் இவரது வீடு, நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் என ஒரே சமயத்தில் 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு கோதாவரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் ஹைதராபாத்தில் இந்த சோதனை நடைபெற்றது.
இதில் இவரது விஜயவாடா வீட்டில், பல்வேறு கோயில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த பட்டுப் புடவைகள் மூட்டை மூட்டையாக இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 537 பட்டுப் புடவை, ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். இவை தவிர, அசையா சொத்துக்களும் கோடிக்கணக்கில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT