Published : 16 Nov 2017 08:57 AM
Last Updated : 16 Nov 2017 08:57 AM

படகு விபத்து சம்பவத்தில் 7 பேர் கைது

ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து 23 பேர் பலியான சம்பவத்தில் 7 பேரை விஜயவாடா போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கிருஷ்ணா நதியில் பவித்ர சங்கமத்தில் தினமும் காண்பிக்கப்படும் ஹாரத்தி நிகழ்ச்சியை காண, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 40-க்கும் மேற்பட்டோர் படகில் சென்றனர். அப்போது படகு கவிழ்ந்ததில் 23 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். .

இதுகுறித்து விஜயவாடா நகர போலீஸ் ஆணையர் கவுதம் சவாங் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மீன் பிடிக்கும் பழைய படகை சுற்றுலா படகாக மாற்றியுள்ளனர். இந்தப் படகில் 25 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால் சம்பவத்தன்று இதில் 44 பேர் பயணம் செய்துள்ளனர். படகிற்கு சுற்றுலா துறையை சேர்ந்த அதிகாரிகளும் முதலீடு செய்து, அதை இயக்க அனுமதி வழங்கியுள்ளனர். இது தொடர்பாக படகு நிர்வாகிகள், ஓட்டுநர், சுற்றுலா துறை அதிகாரிகள் ஊழியர்கள் என 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x