Last Updated : 29 Jul, 2023 05:35 AM

2  

Published : 29 Jul 2023 05:35 AM
Last Updated : 29 Jul 2023 05:35 AM

லண்டன், நியூயார்க் வரிசையில் உலக நகரங்களின் கலாச்சார அமைப்பில் இணைந்த பெங்களூரு

பெங்களூரு: லண்டன், நியூயார்க் ஆகிய நகரங்களின் வரிசையில் உலக நகரங்களின் கலாச்சார அமைப்பில் பெங்களூரு இணைந்துள்ளது. இந்தியாவில் இந்தப் பட்டியலில் இடம்பெறும் முதல் நகரம் என்ற பெருமையை பெங்களூரு பெற்றுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு உலக நகரங்களின் கலாச்சார அமைப்பை (WCCF) லண்டன் மேயர் அலுவலகம் உருவாக்கியது. இதில் லண்டன், நியூயார்க், டோக்கியோ உள்ளிட்ட 40 மாநகரங்கள் அங்கமாக உள்ளன. இந்த அமைப்பு அதன் உறுப்பு நகரங்களை ஆராய்ந்து அதன் மேம்பாடு, பாதுகாப்பு, கலாச்சார ஊக்குவிப்பு உள்ளிட்டவற்றுக்கான ஆலோசனைகளை வழங்குகிறது. லண்டன், நியூயார்க்,டோக்கியோ ஆகிய மாநகராட்சிகளின் அதிகாரிகள் உறுப்பு நகரங்களை பார்வையிட்டு அதனை மேம்படுத்துவதற்கான அறிவுரைகளை வழங்குவர்.

இந்த அமைப்பின் நடவடிக்கைக்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பெங்களூருவை உலகளாவிய நகரமாக மாற்றுவதற்காக ‘Unboxing BLR’ என்ற முன்னெடுப்பை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் பெங்களூரு மாநகரை எதிர்க்கால தேவைக்கு ஏற்ப மறுகட்டமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லண்டனின் கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் துறை துணை மேயர் ஜஸ்டின் சைமன்ஸ் கூறுகையில், “பெங்களூரு மிக வேகமாக வளர்ந்து வரும் நகரம். இது பாரம்பரியமும், கலாச்சார விழுமியங்களையும் கொண்ட நகரமாக இருக்கிறது. பல மொழி, மதம், சாதி, இனங்களை சேர்ந்த மக்கள் அங்கு ஒற்றுமையாக வாழ்கின்றனர். பெங்களூருவில் இந்த கலாச்சாரத்தை மேலும் வலுப்படுத்த புதிய உத்திகளை கையாள திட்டமிட்டுள்ளோம்.

வெறுமனே தொழில்நுட்ப நகரமாக இல்லாமல், கலாச்சார ரீதியாகமேம்பட்ட நகரமாகவும் அதை மாற்ற இருக்கிறோம். இதன் மூலம் பெங்களூரு உலகளாவிய நகரமாக மாறுவதுடன், இந்தியாவின் கலாச்சார தலைநகரமாகவும் மாறும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x