Published : 05 Nov 2017 09:03 AM
Last Updated : 05 Nov 2017 09:03 AM
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் நேற்று இணைந்தார்.
ஆந்திர மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து வருகின்றனர். இதுவரை 21 பேர் தெலுங்கு தேச கட்சியில் இணைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி புகார் அளித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவை சபாநாயகருக்கும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, கட்சி தாவியவர்களில் 4 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கி உள் ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரம்பசோடவரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ராஜேஸ்வரி நேற்று அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். தொகுதி மக்களின் நலனுக்காகவே ஆளும் கட்சியில் இணைந்ததாக ராஜேஸ்வரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
இவருடன் இதுவரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 எம்எல்ஏ-க்கள் தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT