Published : 15 Nov 2017 11:48 AM
Last Updated : 15 Nov 2017 11:48 AM
ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிர் சையத் அலி ஹமதானி தர்கா சேதமடைந்தது.
நள்ளிரவு 12.30 மணியளவில் தர்காவின் மரத்தாலான மேல் கூம்புப்பகுதி திடீரெனத் தீப்பற்றி எரிந்ததை அங்கிருந்த மக்கள் கண்டனர்.
தர்காவை ஒட்டி வசிக்கும் தாஜாமுல் அகமது இதுகுறித்துப் பேசும்போது, ''இரவில் ஏற்பட்ட மின்னலுடன் நெருப்பும் இணைந்து எரிந்தது.
அருகில் இருந்த நூற்றுக்கணக்கானோர் நெருப்பை அணைக்கப் போராடினர். சுமார் 1 மணி நேரம் கடுமையாகப் போராடிய பிறகு தீ அணைக்கப்பட்டது.
எனினும் இரட்டை மாடி தர்காவின் மேல் கூரை சேதமடைந்துள்ளது'' என்றார்.
இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி, தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
காஷ்மீருக்கு மிர் சையத் அலி ஹமதானி வருகை தந்ததைக் கொண்டாடும் விதமாக இந்த தர்கா 1935-ம் ஆண்டு கட்டப்பட்டது. சூபி துறவியான ஹமதானி அந்நாட்களில் பெரிதும் கொண்டாடப்பட்டவர் ஆவார்.
காஷ்மீரின் இஸ்லாமிய நம்பிக்கையின் அடையாளம் இந்த தர்கா ஆகும். இதுதவிர ஜீலம் நதிக்கரையின் அருகே அமைந்திருக்கும் தர்கா, மரக்கலையின் தனித்த அடையாளமாகவும் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT