Published : 18 Nov 2017 08:52 AM
Last Updated : 18 Nov 2017 08:52 AM

முத்து பல்லக்கில் பத்மாவதி தாயார் பவனி

திருப்பதியை அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 3-ம் நாளான நேற்று காலையில் முத்துப்பல்லக்கு வாகனத்தில் தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி அருகே உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், கார்த்திகை பிரம்மோற்சவ விழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதில் தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். 3-ம் நாளான நேற்று காலையில் கொட்டும் மழையிலும் முத்துப்பல்லக்கு வாகனத்தில் 4 மாட வீதிகளில் தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதைத் தொடர்ந்து இரவில் சிம்ம வாகனத்தில் வந்து பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x