

இம்பால்: கடந்த மே 4-ம் தேதி மணிப்பூரில் 2 பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை தண்டித்து அந்த பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று நாகா பழங்குடி இனத்தை சேர்ந்த அமைப்புகள், வலியுறுத்தி உள்ளன.
ஐக்கிய நாகா கவுன்சில், அகில இந்திய நாகா மாணவர்கள் கூட்டமைப்பு, நாகா மக்கள் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, “பாதிக்கப்பட்ட பெண்கள் சார்ந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். பாரபட்சமின்றி வழக்கு விசாரணை நடைபெற வேண்டும். குகி இன பெண் களுக்கு விரைந்து நீதி கிடைக்க மணிப்பூர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.