Published : 22 Jul 2023 12:08 PM
Last Updated : 22 Jul 2023 12:08 PM
புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியின பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூர வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பாஜக மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீர்.
நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் 4-ம் தேதி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் நிகழ்ந்தது. இது தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மீதான இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக தேசிய அளவில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், “இது மிகவும் வெட்கக்கேடானது. இந்தப் பிரச்சினை மணிப்பூர் மாநிலத்துக்குமானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த தேசத்துக்குமானது. அதனால் ஓர் இந்தியன் என்று நான் சொல்லிக்கொள்வதில் வெட்கப்படுகிறேன். இதனால், ஒட்டுமொத்த தேசத்துக்கும் தலைகுனிவு. இதில் அரசியல் கூடாது. இதுபோன்ற ஒரு சம்பவம் நாட்டில் எங்கும் நடக்கக் கூடாது” என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். | வாசிக்க > மணிப்பூர் அதிர்ச்சிகள்: அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT