Published : 22 Jul 2023 05:44 AM
Last Updated : 22 Jul 2023 05:44 AM

அர்ச்சகர்கள் விரும்பும்போது பதவி ஓய்வு பெறலாம் - ஆந்திர அரசு புதிய அரசாணை

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் இந்து சமய அறநிலைத் துறை கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் 60 வயது நிரம்பியதும் ஓய்வு பெற வேண்டும் எனும் அரசாணை தற்போது அமலில் உள்ளது.

ஆனால், சமீபத்தில், ஆந்திர அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ல் இருந்து 62 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதனால் அர்ச்சகர்களும் 62 வயதில் ஓய்வு பெற உள்ளனர். ஆனால், இதற்கிடையே, நேற்று திடீரென இந்து சமய அறநிலைத்துறை சார்பில் புதிய அரசாணை வெளியானது.

அதன்படி, கோயில் அர்ச்சகர்கள் இனி அவர்கள் விருப்பப்படி ஓய்வு பெறலாம் என்றும், அர்ச்சகர்கள் பணிக்குரிய வயது உச்ச வரம்பு நீக்கப்படுவதாகவும் அந்த அரசாணையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும், உடல் நலம் குன்றினால் மட்டுமே அந்த அர்ச்சகர் விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறலாம் எனவும் புதிய அரசாணை மூலம் தெரியவந்துள்ளது. இதனால், அர்ச்சகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x