Published : 28 Nov 2017 09:39 AM
Last Updated : 28 Nov 2017 09:39 AM
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா நேற்று காலை திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “காலேரு-நகரி குடிநீர் திட்ட கால்வாய் பணிகளை விரைவில் பூர்த்தி செய்ய வேண்டுமென வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (இன்று) நகரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரை தொடங்க உள்ளேன். நகரி அருகே உள்ள சத்திரவாடா பகுதியில் காலை 8.30 மணிக்கு எனது பாதயாத்திரை தொடங்கும். டிசம்பர் 2-ம் தேதி காலை திருமலைக்கு வந்து சேருவேன்.
இத்திட்டம் பூர்த்தியடைந்தால் எனது நகரி தொகுதியில் உள்ள 5 மண்டல மக்களுக்கு குடிநீருக்கும், சாகுபடிக்கும் எந்தவித பிரச்சினையும் இருக்காது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT