Published : 05 Nov 2017 08:57 AM
Last Updated : 05 Nov 2017 08:57 AM
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திரா முழுவதும் நாளை பாதயாத்திரை தொடங்கவுள்ள நிலையில், இது வெற்றிகரமாக அமைய நேற்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
‘பிரஜா சங்கல்ப யாத்திரா’ என்ற பெயரில் ஜெகன், நாளை கடப்பா மாவட்டத்தில் தனது பாதயாத்திரையை தொடங்கு கிறார். 6 மாத காலம் நடைபெற உள்ள இந்த பாதயாத்திரையில் மொத்தம் 3,000 கி.மீ. வரை இவர் நடந்து சென்று மக்களை சந்திக்கிறார். ஜெகன் தனது பாதயாத்திரை வெற்றிகரமாக அமைய வேண்டி, நேற்று காலை திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT