Published : 13 Jul 2023 04:34 AM
Last Updated : 13 Jul 2023 04:34 AM
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள நியூமன் கல்லூரி பேராசிரியர் டி.ஜே.ஜோசப்பின் வலது கையை கடந்த 2010 ஜூலை 4-ம் தேதியன்று பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த சிலர் வெட்டினர்.
இந்த வழக்கு, கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் விடுவிக்கப்படுவதாகவும், 6 பேர் குற்றவாளிகள் என்றும் நீதிமன்றம் கூறியது. தண்டனை விவரங்கள் வியாழன் (இன்று)பிற்பகல் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது. கொலை முயற்சி, சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அந்த 6 பேரும் குற்றவாளிகள் என என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனில் கே பாஸ்கர் தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT