Published : 26 Apr 2014 10:17 AM
Last Updated : 26 Apr 2014 10:17 AM

தோல்வியே காணாத பெண் எம்.எல்.ஏ.வின் அரசியல் சகாப்தம் விபத்தால் முடிந்த சோகம்

ஆந்திர பேரவைத் தேர்தல் களத் தில் இருந்த ஷோபா நாகிரெட்டி, சாலை விபத்தில் மரணமடைந்தது அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனது கணவரின் ஆதரவோடு அரசியலில் நுழைந்து இளம் வயதிலேயே 4 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற அவர், 5-வது முறையாக வெற்றிக் கனியை பறிப்பதற்கு முன்பாகவே, விபத்து அவரது உயிரை பறித்து விட்டது.

ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் எஸ்.வி சுப்பா ரெட்டியின் மகள் ஷோபா. இண்டர்மீடியட் (பிளஸ் 2) வரை படித்தவர். அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது கணவர் பூமா நாகி ரெட்டி 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து, இப்போது நந்தியாலம் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளராக களத்தில் உள்ளார்.

இவர் 1997-ல் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதால், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. அப்போது அந்த இடத்தில் தனது மனைவியை போட்டியிட வைத்தார். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் முதன்முறையாக ஷோபா நாகிரெட்டி சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999-ல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றார். பிறகு சிரஞ்சீவி தொடங்கிய பிரஜா ராஜ்யம் கட்சியில் இணைந்தார். இதை தொடர்ந்து இக்கட்சி சார்பில் 2009-ம் ஆண்டு பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். பிறகு சிரஞ்சீவி கட்சியை கலைத்து காங்கிரஸ் கட்சியோடு இணைந்ததால், இவர் அக்கட்சியை விட்டு விலகி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கடந்த 2012-ல் நடந்த இடைத்தேர்தலில் 4-வது முறையாக எம்.எல்.ஏ. வாக தேர்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு, ஜகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா, கர்னூலில் பிரச்சாரம் மேற்கொண்டார். இவருடன் ஷோபா நாகி ரெட்டியும் கலந்து கொண்டார். பின்னர் இரவு காரில் நந்தியாலம் பகுதியில் இருந்து ஆள்ளகட்டாவிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நெல் குவியல் மீது கார் ஏறி இறங்கியதால் விபத்துக்குளானது. இதில் படுகாயமடைந்த ஷோபா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

இந்த இளம் வயதில் அரசி யல் துறையில் ஆண்களுக்கு இணையாக பல்வேறு சாதனை களைப் புரிந்த ஷோபாவின் மரணத்தை அப்பகுதி மக்கள் தாங்கி கொள்ள முடியாமல் விடிய விடிய நேரில் வந்து கண்ணீர் அஞ் சலி செலுத்தினர். வெள்ளிக்கிழமை மாலை, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x