Published : 04 Jul 2023 07:52 AM
Last Updated : 04 Jul 2023 07:52 AM
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதையடுத்து, கடந்த 30-ம் தேதி நடந்த சட்ட மேலவை இடைத்தேர்தலில் ஜெகதீஷ் ஷெட்டர், திப்பனப்பா கமக்னூர், என்.எஸ். போஸராஜு ஆகிய 3 பேரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டனர். இவர்கள் 3 பேரும் போட்டியின்றி தேர்வாகினர்.
இந்நிலையில், நேற்று சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட 3 பேரும் பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது முதல் வர் சித்தராமையா, சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் ஆகியோர் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT