Published : 28 Jun 2023 04:11 AM
Last Updated : 28 Jun 2023 04:11 AM
சென்னை: உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள நரேந்திர நகரில் நடைபெற்ற ஜி-20 உள்கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தின்போது வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்தின்போது முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்றார்.
அப்போது வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய முதல்வர், ``இந்த தெய்வீகத் தன்மை கொண்ட இமயமலைப் பள்ளத்தாக்குக்கு நாங்கள் உங்களை உளப்பூர்வமாக வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம். இந்த ஆண்டு ஜி-20-யின் கருப்பொருள் `ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்பதாகும். இது அடிப்படையில் இந்திய வேத நாகரிகத்தால் உலகுக்கு வழங்கப்பட்ட `வசுதைவ குடும்பகம்' கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது.
ஜி-20-யின் 3 கூட்டங்களை நடத்துவதற்கு உத்தராகண்ட் மாநிலத்துக்கு வாய்ப்பை வழங்கியதற்காக, நமது பிரதமர் மோடிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முக்கியமான பொறுப்பை நிறைவேற்றுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், ஏனெனில் உத்தராகண்ட் மக்கள் அனைவருக்கும் இது ஒரு பெரியசாதனையாகும். நமது பண்டைய நாகரிகமான "அதிதி தேவோபவ" என்ற எண்ணம், விருந்தினர்களுக்குச் சேவை செய்ய எங்களை எப்போதும் தயாராக வைத்திருக்கிறது, எனவே நீங்கள் அனைவரும் இதை விரும்புவீர்கள் என்று நம்புகிறோம்'' என்று தாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT