Published : 19 Jun 2023 01:52 PM
Last Updated : 19 Jun 2023 01:52 PM
கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தில் வெள்ள அபாயம் நிலவி வருகிறது. கிராமங்கள், நகரங்கள், விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்துக்கு ‘ரெட் அலட்ர்ட்’ விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், வியாழக்கிழமை வரை மாநிலத்தின் பல்வேறு மாாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் எனக் கணித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் குவாஹாட்டி பிரந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலட்ர்ட்’ விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "அசாமின் கீழ்ப்பகுதியில் இருக்கும் மாவட்டங்களான கோக்ராஜ்ஹர், சிராங், பாக்சா, பார்பெட்டா மற்றும் பொங்கைகான் பகுதிகளில் கனமழை (24 மணி நேரத்தில் 7 -11 செ.மீ.,) முதல் மிக கனமழை (24 மணிநேரத்தில் 11 முதல் 20 செ.மீ., வரை) மிக அதிகமான கன மழை (24 மணிநேரத்தில் 20 செ.மீ., மேல்) மழைப்பெய்யக்கூடும். அதே நேரத்தில், துப்ரி, கம்ருப், கம்ருப் மெட்ரோபாலிட்டன், நல்பரி, திமா ஹாசோ, கச்சார், கோல்ப்ரா மற்றும் கரிம்கஞ்ச் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைப்பெய்யக்கூடும்". இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செவ்வாய்க்கிழமைக்கு ஆரஞ்சு அலர்ட்டும், அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மஞ்சள் அலார்ட்டும் விடுத்துள்ளது.
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ளம் குறித்து வெளியிட்டுள்ள தினசரி அறிக்கையில்,"கச்சார், டர்ராங், திமாஜ், திப்ருகர், கோல்கட், ஹோஜாய், லக்கிம்பூர், நாகான், நல்பாரி, சோனிட்பூர், டின்சுகியா மற்றும் உடல்குரி மாவட்டங்களில் வெள்ளம் காரணமாக 33,400க்கும் அதிமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் லக்கிம்பூர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ளத்தால் 25,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திப்ருகரில் 3,800 பேரும் தின்சுகியாவில் 2,700 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிர்வாகத்தின் சார்பில் செயல்படும் ஒரு வெள்ள நிவாரண முகாமில் 9 பேர் தங்கவைக்கப்பபட்டுள்ளனர். அதே நேரத்தில் மூன்று மாவட்டங்களில் 16 நடமாடும் நிவாரண விநியோக மையங்கள் செயல்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி, 142 கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 1,510.98 ஹெர்டர் பரப்பளவிலான பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
பிஸ்வநாத், போகைகான், திப்ரூகர், கோக்ராஜ்கர், லக்கிம்பூர், மஜுலி, மோரிகான், நாகான், சிவசாகர், சோனிட்பூர், தெற்கு சல்மாரா மற்றும் உடால்குரி மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் மண் அரிப்புகள் நிகழ்ந்துள்ளது. திமா மற்றும் கரிம்கஞ்ச் பகுதிகளில் கனமழை காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
சோனிட்புர், லக்கிம்பூர், கச்சார், திமேஜ், கோலபாரா, நாகான், உடால்குரி, சிராங், திப்ருகர், கமருப், கர்பி அன்லாங், கரீம்கஞ்ச், போன்காய்கான், மஞ்சுலி, மோரிகான் திவாசாகர் மற்றும் தெற்கு சல்மாரா மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் பிற உள்கட்டமைப்பு வசதிகள் சேதமைடந்துள்ளன.
மேலும், நேமாகதிகாசடில் பிரம்மபுத்திரா நதியும், அதன் துணை நதிகளான புதிமாரி என் ஹெச் ரோடு கிராஸிங்கிலும், கமபுரி நதி கோபிலியிலும் அபாய அளவினையும் தாண்டி ஓடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment