Published : 21 Oct 2017 02:31 PM
Last Updated : 21 Oct 2017 02:31 PM
'நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது மட்டுமல்ல, அது அனைவருக்கும் கேட்கப்படவும் வேண்டும்' என்கின்றனர் சில இளம் வழக்கறிஞர்களும் சட்டக்கல்லூரி மாணவர்களும்.
இதுகுறித்து அக்டோபர் 17 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ள இளம் வழக்கறிஞர்கள், நீதிபதிகளின் மேசைகளில் அமைக்கப்பட்டுள்ள மைக்ரோபோனை அவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மைக்ரோபோன்களைப் பயன்படுத்தாமல் இருப்பது பொதுமக்களின் பணத்தை வீணடிப்பதாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞர்கள் குமார் ஷனு மற்றும் பராஸ் ஜெயின், கபில்தீப் அகர்வால் என்னும் சட்டக் கல்லூரி மாணவர் ஆகியோர் இணைந்து இந்தக் கடிதத்தை அளித்துள்ளனர்.
அதில் ''தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி, நீதிமன்றத்தின் வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்க வேண்டும். இதற்கு நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் வழக்கறிஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு கேட்கும்படி இருக்க வேண்டும்.
சுமார் ரூ. 91 லட்சம் (தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி) செலவழித்து அமைக்கப்பட்டுள்ள மைக்ரோபோன்கள் இனி பயன்படுத்தப்பட வேண்டும். 2 வாரங்களுக்குள் அவை பயன்படுத்தப்படவில்லை எனில் எங்களின் கோரிக்கை மறுக்கப்பட்டதாக எடுத்துக் கொள்வோம். பொதுமக்களின் பணம் வீணாவது எங்களுக்கு வேதனையையே அளிக்கிறது'' என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT