Published : 13 Jun 2023 04:54 AM
Last Updated : 13 Jun 2023 04:54 AM

சமூக வலைதள முகப்பில் அவுரங்கசீப் படத்தை பதிவிட்டவர் மீது வழக்கு

மும்பை: முகலாய ஆட்சியாளர்கள் அவுரங்கசீப், திப்பு சுல்தானை மையப்படுத்தி மகாராஷ்டிராவின் அகமதுநகர், சம்பாஜிநகர், கோல்காபூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அண்மையில் கலவரங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக அந்த பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

சமூக வலைதளங்களில் முகலாய ஆட்சியாளர்களை ஒருதரப்பினர் விமர்சித்தும் மற்றொரு தரப்பினர் புகழ்ந்தும் படங்கள், வீடியோ, கருத்துகளை பதிவிடுவதால் கலவரங்கள் ஏற்படுவதாகவும் கலவரத்தை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். அண்மையில் ஏற்பட்ட கலவரத்தில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். பலர் காயமடைந்தனர். இதன்காரணமாக பல்வேறு நகரங்களில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

இந்த சூழலில் நவிமும்பை பகுதியில் பணியாற்றும் ஒருவர் தனது சமூக வலைதள முகப்பில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் புகைப்படத்தை பதிவிட்டார். இதற்கு மற்றொரு தரப்பினர் சமூக வலைதளங்கள் வாயிலாக கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்த சூழலில் அவுரங்கசீப் புகைப்படத்தை பதிவிட்ட 29 வயதுஇளைஞர் மீது வாஸி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் போலீஸ் பிடியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிராவில் கலவரம் பரவுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x