Published : 13 Jun 2023 04:59 AM
Last Updated : 13 Jun 2023 04:59 AM

போலி சேவை எண்ணில் பேசியதால் ரூ.90 ஆயிரத்தை பறிகொடுத்த குஜராத் வாடிக்கையாளர் - 9 மாதங்களுக்கு பிறகு வழக்கு பதிவு

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்த ராஜு பிரஜாபதி, கடந்த செப்டம்பர் மாதம் தன்னுடைய காருக்காக இணையவழியில் பாஸ்டேக் வாங்கி உள்ளார்.

இதையடுத்து, பாஸ்டேக் பார்சலில் அனுப்பி வைக்கப்படும் என்று புளூடார்ட் கொரியர் நிறுவனத்திலிருந்து அவருக்கு தகவல் வந்துள்ளது.

குறிப்பிட்ட தேதியில் பார்சல் கிடைக்காததால், புளூ டார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை கூகுளில் தேடி எடுத்துள்ளார் அவர்.

அந்த எண்ணை தொடர்புகொண்டு பேசியபோது, மறுமுனையில் பேசியவர், ஒரு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்புமாறு அவரிடம் கூறியுள்ளார். அத்துடன் அவர் கோரியபடி ரூ.5-ஐ இணையவழியில் செலுத்தி உள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்தில் கொரியர் நிறுவன ஊழியர் பார்சலை வழங்கி உள்ளார். அதன் பிறகு 24 மணி நேரம் கழித்து பிரஜாபதியின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக தொடர்ந்து குறுந்தகவல் வந்துள்ளது. 3 பரிவர்த்தனை மூலம் மொத்தம் ரூ.90 ஆயிரம் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வங்கியை தொடர்பு கொண்டு தனது கணக்கை முடக்குமாறு கூறியுள்ளார்.

அதன் பிறகு இணையதள குற்றப்பிரிவு உதவி எண்ணில் இதுகுறித்து புகார் செய்துள்ளார். 9 மாதங்களுக்குப் பிறகு அந்தப் புகார் மீது, போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x