Published : 22 Oct 2017 11:32 AM
Last Updated : 22 Oct 2017 11:32 AM

தெலங்கானாவில் ரசாயன கழிவுநீர் கலப்பு: ஆயிரக்கணக்கில் மீன்கள் இறப்பு

தெலங்கானா மாநிலம், மெட்சல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரியில் ரசாயன கழிவு நீர் கலந்ததால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்தன.

தெலங்கானாவின் மெட்சல் மாவட்டம், கினரா வட்டம், தம்மய்ய கூடா ஏரியில் மீன் வளர்ப்பு வியாபாரம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு ரூ.8 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஏரியில் கடந்த 6 மாத காலமாக மீன்கள் வளர்க்கப்பட்டன.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள குப்பை மேடு பகுதியில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீர் ஏரியில் கலந்தது. இதன் காரணமாக ஆயிரக் கணக்கான மீன்கள் இறந்தன.

இந்தச் சம்பவம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x