Published : 27 Jul 2014 10:21 AM
Last Updated : 27 Jul 2014 10:21 AM
தேசிய நீதி ஆணையம் அமைக் கும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேசிய அரசியல் கட்சித் தலைவர்களிடம் கருத்து கேட்டு மத்திய சட்டத்துறை அமைச் சகம் கடிதம் எழுதியுள்ளது.
நீதிபதிகள் நியமனம் தொடர் பாக ஓய்வு பெற்ற நீதிபதி மார் கண்டேய கட்ஜு புகார் தெரி வித்ததற்கு முன்பாகவே இந்த நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கிவிட்டதாகக் கூறப்படு கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய நீதிபதி ஒருவரின் பதவி உயர்வு விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டதாக பிரஸ் கவுன்சில் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு கடந்த வாரம் புகார் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் முன்னாள் தலைமை நீதிபதிகள் மூவர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக் காமல் சமரசம் செய்து கொண்ட தாகவும் புகார் கூறப்பட்டது.
இந்த சம்பவத்தால், நாடாளு மன்றத்தை இரு நாட்களுக்கு அதிமுக உறுப்பினர்கள் ஸ்தம்பிக்க வைத்தனர். அப்போது, தேசிய நீதி ஆணையம் அமைக்க அரசு கவனம் செலுத்த இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தகவல் அளித்தார்.
தேசிய நீதி ஆணையம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு ஏற்கெனவே தொடங்கி விட்டது. இது தொடர்பாக முக்கிய தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கருத்தைக் கேட்டு, கடந்த 17-ம் தேதி மத்திய சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
அதில், ஆணையம் அமைப்பதற் காக சட்ட வல்லுநர்களின் ஆலோ சனையை அரசு கேட்டுள்ளதாக வும், நீதி ஆணையம் அமைப் பதற்கான மசோதாவை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த விரும்புவதாகவும் மத்திய சட்ட அமைச்சகம் கூறியுள்ளது. அதே போன்று அரசியல் கட்சிகளும் தங்களின் ஆலோசனைகளை அரசுக்கு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ‘தி இந்து’ செய்தியாளரிடம் இந்தியக் கம் யூனிஸ்ட் கட்சியின் தேசிய செய லாளர் டி.ராஜா கூறும்போது, ‘இந்தக் கடிதம் குறித்து என் னிடம் அமைச்சர் ரவிசங்கர், மாநிலங் களவையில் சந்தித்த போது தெரிவித்தார். தேசிய நீதி ஆணை யத்தின் அவசியத்தை எங்கள் கட்சி ஏற்கனவே வலி யுறுத்தி உள்ளது. நீதிபதிகள் நியமனம், பணி மாற்றம், பதவி உயர்வு, நீதிபதிகள் மீதான புகார் குறித்து விசாரணை மற்றும் பதவி நீக்கம் உள்ளிட்ட அனைத்தையும் மேற்கொள் ளும் அமைப்பாக தேசிய நீதி ஆணையத்தை ஏற்படுத்த வேண் டும். மத்திய சட்டத்துறை அமைச் சகத்தின் கடிதம் தொடர்பாக, எங்கள் கட்சித் தலைவர்களிடம் ஆலோசனை செய்து பதிலளிப் போம்” என்றார்.
நீதிபதிகள் நியமனம் தொடர் பாக முந்தைய வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே, அப்போது சட்டத் துறை அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி, மசோதா கொண்டு வர முயன்றதாகவும், அது நிறை வேறாமல் போனதாகவும் கூறப் படுகிறது. அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலும், அப்போதைய சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல் அதே மசோதாவை சில மாற்றங்கள் செய்து நிறைவேற்ற முயன்றதாக கூறப்படுகிறது.
தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பாஜக, நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மார் கண்டேய கட்ஜு தெரிவித்த புகாரை ஒரு வாய்ப்பாக பயன் படுத்திக்கொண்டு, தேசிய நீதி ஆணையம் அமைக்கும் முயற்சி யில் தீவிரமாக இறங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT