Published : 08 Jun 2023 05:29 AM
Last Updated : 08 Jun 2023 05:29 AM
புதுடெல்லி: மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கக் கோரி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த குகி இனத்தைச் சேர்ந்த மக்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டின் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்டடனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம், 2 இனக்குழுக்கள் இடையேஏற்பட்ட மோதல், வன்முறையில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன. இதையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக பாதுகாப்புப் படையினர் பல்வேறு இடங்களில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில் மணிப்பூரைச் சேர்ந்த குகி இன மக்கள் சிலர், டெல்லிக்கு வந்து மத்திய அமைச்சர் அமித் ஷா வீட்டின் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூரில் கொல் லப்பட்டு வரும் குகி இன மக்களை காக்க வேண்டும் என்று அவர்கள் அப்போது கோஷம் எழுப்பினர்.
மேலும் மணிப்பூரில் கலவரத் தைத் தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து போராட்டம் நடத்திய குகி இனத்தைச் சேர்ந்த வர்களில் 4 பேர் மட்டும் அமித் ஷா வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு அவர்களது கோரிக்கை மனு பெறப்பட்டது. போராட்டம் நடத்திய மற்றவர்கள், டெல்லி ஜந்தர்மந்தர் மைதானத்துக்கு அனுப்பப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT