Published : 02 Oct 2017 06:25 AM
Last Updated : 02 Oct 2017 06:25 AM
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஒருவருக்கொருவர் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொள்ளும் விநோத பண்டிகை யில் ஒருவர் மண்டை உடைந்து உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், தேவர கட்டா எனும் கிராமத்தில் மாலம்மாள் மல்லேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டாண்டு காலமாக ஒரு விநோத பண்டிகை நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆயுத பூஜையன்று இரவும் மாலம்மாள், மல்லேஸ்வர சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்னர் உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகின்றனர். அப்போது, சுற்றுப்புறத்தில் உள்ள 15 கிராம மக்கள் 3 பிரிவுகளாக பிரிந்து உருட்டு கட்டைகளால் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொள்கின்றனர். இறுதியில் எந்த கிராமத்தினர் அந்த உற்சவ சிலைகளை கைப்பற்றுகின்றனரோ அந்த கிராமத்தினர் அந்த ஆண்டு முழுவதும் நல்ல பலன்கள் பெறுவர் என நம்பப்படுகிறது.
இந்த உற்சவத்தின் போது பலர் படுகாயமடைகின்றனர். சிலர் இறந்துவிடுகின்றனர். ஆந்திர அரசு இதனை பலமுறை தடுத்தும் எந்த பலனும் இல்லை. போலீஸார் பலமுறை இந்த கிராம மக்களுக்கு கவுன்சிலிங் அளித்தும் ‘இது எங்கள் கலாச்சாரம்’ என கூறி மறுத்துவிட்டனர். இந்நிலையில், இக்கிராமத்தில், மல்லேஸ்வர சுவாமி திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்றது. அசம்பாவிதங்களை தடுக்க போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். எனினும், போலீஸாரையும் மீறி கிராம மக்கள் ஒருவொருக்கொருவர் உருட்டுக்கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். இதில் ஈரண்ணா என்பவர் மண்டை உடைந்து உயிரிழந்தார். மேலும் 70 பேர் காயமடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT