Published : 02 Apr 2023 04:15 AM
Last Updated : 02 Apr 2023 04:15 AM

மண்டபத்தில் மயில்கள் சரணாலயம் அமைக்கப்படுமா? - இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ராமேசுவரம்: தேசியப் பறவையான மயில்கள் இனத்தை பாதுகாக்க, மண்டபத்தில் மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டுமென பறவை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கி யோவில் 1960-ம் ஆண்டு சர்வதேச பறவைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அழிந்து வரும் பறவை இனங்களை பாதுகாக்க ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதியும் தங்கள் நாட்டின் பறவையைத் தேர்வு செய்து, அதை தேசியப் பறவையாக அறிவிக்க முடிவெடுத்தனர். இதனைத் தொடர்ந்து, இந்தியா மயிலை தேசியப் பறவையாக அறிவித்தது.

மயில் தோகைகளை மருத்துவத்துக்கு பயன் படுத்த, பல ஆசிய நாடுகளில் வரவேற்பு இருக்கிறது. இதனால் மயில்கள் தொடர்ந்து வேட்டை யாடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மயில்கள் வேட் டையாடுவதை தடுக்க, 1972-ம் ஆண்டு மயில்களை வேட்டையாடுவது தண்டனைக்குரியதாக சட்டம் இயற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் விவசாய நிலங்களில் பெரும் பான்மையாக வாழ்ந்து வந்த மயில்கள் போதிய உணவு கிடைக்காததால் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் சிதறும் கோதுமை, அரிசி மற்றும் தானியங் களுக்காக ரயில் தண்ட வாளப் பகுதிகளை நோக்கி இடம் பெயரத் தொடங்கின.

தற்போது மதுரை - ராமேசுவரம் ரயில்வே பாதையில் ராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம் முகாம், மண்டபம், பாம்பன், ராமேசுவரம் பகுதியில் மயில்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

இது குறித்து பறவைகள் ஆர்வலர் கவுசிக் கூறியதாவது, மயில்கள் பாம்பன் சாலைப் பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் விட்டுச்செல்லும் உணவுப் பொருட்களை தேடி வருகின்றன. உணவை சாப்பிடும் ஆர்வத்தில் பாம்பன் சாலைப் பாலத்தில் வாகனங்களில் அடிபட்டு மயில்கள் இறப்பதும் உண்டு.

பலத்த காற்றால் கடலில் விழுவதும் உண்டு. கர்நாடகத்தில் பங்கபூர், ஆதிசிந்தனகிரி ஆகிய இடங்களிலும், மகாராஷ்டிரத்தில் நெய்கானிலும் மயில்களைப் பாதுகாக்க தனி சரணாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபம் பகுதியில் வசிக்கும் மயில்களை பாதுகாக்க மண்ட பத்தில் வனத்துறைக்கு சொந்த மான காடுகளில் சரணாலயம் அமைக்க வேண்டும்.

இதன் மூலம், மயில்களுக்கு பாதுகாப்பு கிடைப் பதோடு, ராமேசுவரம் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா வருபவர்களுக்கு மயில்கள் சரணாலயத்தை பார்த்த திருப்தி கிடைக்கும், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x